நன்றி நன்றி என்று சொல்லும்போது நெஞ்சம் குன்றில் துள்ளி விழும் அருவிபோல் மகிழும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி நன்றி என்று சொல்லும்போது நெஞ்சம்

குன்றில் துள்ளி விழும் அருவிபோல் மகிழும் (2)

நன்றி நன்றி என்று சொல்லும்போது நெஞ்சம்

இறையே நான் உந்தன்

அன்பு அணைப்பினில் குழந்தைபோல் மகிழ்ந்தேன்

சிறையாய் எனைச்சூழும் கொடும்

சுயநலம் பகைமையை வென்றேன்

இஸ்ராயேல் செங்கடலைக் கடந்ததைப் போன்ற நிகழ்வை

இதயத்தில் உணர்ந்தேன் அன்பே மகிழ்ந்து சொல்வேன் நன்றி

மகனாய் வாழ்வேன் நன்றி


1. வாழ்வின் முடிவை உம்மிடம் அளித்தேன் நம்பிக்கை வைத்து

வாழும்போது துன்பம் கண்டேன் விழுந்தேன் திகைத்து

வீழ்ந்தபோது கரத்தில் ஏந்திக் காத்தவர் நீரே

சாவை வென்ற சக்தியே உந்தன் ஆற்றலை அளித்தாய்

போற்றி போற்றி போற்றி


2. உடைந்த யாழாய் நொறுங்கிக் கிடந்தேன் தன்னலம் கொண்டு

உயர்ந்த இலக்கை மறந்து வாழ்ந்தேன் இருளின் முன்பு

உடைந்த என்னை இணைத்து ஒன்றாய்ச் சேர்த்தவர் நீரே

உந்தன் வாழ்வே இயேசுவே எந்தன் நோக்கம் என்றாய்

போற்றி போற்றி போற்றி