கவலைகள் இனி வேண்டாம் கடவுளை நம்பியிரு தாழ்ந்து போகமாட்டாய் உயர்வு பெறச் செய்வார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கவலைகள் இனி வேண்டாம் கடவுளை நம்பியிரு

தாழ்ந்து போகமாட்டாய் உயர்வு பெறச் செய்வார் (2)


1. பாம்புகள் மீது நடந்து செல்ல

பறவை நாகத்தை மிதித்துப்போட (2)

வல்லமை பெறச் செய்வார் வெற்றியும் தந்திடுவார்

கலங்கியோர் கவலை போக்கிடும் தேவன்

உன்னை மறப்பாரோ உன்னைக் காத்திடுவார்


2. செங்கடல் போல துன்பங்களும்

எரிக்கோ மதில்போல் தோல்விகளும் (2)

எதிர்கொண்டு வந்தாலும் தோல்விகள் உனக்கில்லை

பாலையில் மன்னா பொழிந்திட்ட தேவன்

பாரங்கள் போக்கிடுவார் சுமைகளைத் தாங்கிடுவார்