புதியதோர் படைப்பாய் புவியினை மாற்றும் புனிதத்தின் ஆவியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதியதோர் படைப்பாய் புவியினை மாற்றும்

புனிதத்தின் ஆவியே

வரங்களைப் பொழியும் வளம்நிறை ஊற்றே பரிசுத்த ஆவியே(2)

மண்ணின் முகத்தைப் புதுப்பிக்க வருவீர் - நிறை

மகிழ்ச்சியை நிரப்பிட வருவீர் (2)


1. ஞானம் நிறைந்த சொல்வளமே

நலம் தரும் நம்பிக்கை அருட்கொடையே (2)

பிணிகளைத் தீர்க்கும் அருமருந்தே

தேவ கனிகளால் தேற்றும் அதிசயமே - மண்ணின்...


2. வானம் திறந்த தீச்சுடரே அருட்கொடை தந்திடும் அருட்சுகமே -2

குளிரினைப் போக்கும் அனல்காற்றே - வாழ்வின்

குறைகளைத் தீர்க்கும் நிறையருளே (2)- மண்ணின்...