இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி - 2

திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2


1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2

புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே

விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்

இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய்


2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2

திருவாழ்வைத் தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்

பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்

மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் - வாராய்