சிறு குழந்தை போல் நான் மாறவேண்டும் என் இயேசுவே சின்னக் கரம்பிடித்து நடத்தும் தாய்போல் என்னை நடத்திடுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சிறு குழந்தை போல் நான்

மாறவேண்டும் என் இயேசுவே (2)

சின்னக் கரம்பிடித்து நடத்தும் தாய்போல் என்னை நடத்திடுமே -2

என் சிந்தையிலும் என் உள்ளத்திலும் நீ இருக்கவேண்டுமே

உம் சித்தப்படி என் வாழ்க்கையில் எல்லாம் நடக்கவேண்டுமே


1. கவலையின்றி தன் அன்னை மடியில் தவழும் பிள்ளை போல்

எந்தன் கருவில் இருந்து காத்திடும் தெய்வமே

உன்னுடன் இருக்கின்றேன் (2)

கடல் அலைகள்போல் தொடர் துன்பங்கள் வந்து

மோதும் வேளையிலே என் கரங்கள் பிடித்து

கனிவாய் அணைப்பது என் அன்பு தெய்வமே


2. கரங்கள் குவித்து கண்கள் மூடி செபிக்கும் பிள்ளைபோல்

உன் கவலை மறந்து இறைவனை நினைத்து

உன்னை மறந்துவிடு (2)

தினம் கலங்கி தவிக்கும் மனிதனே நீ கடவுளின் பிள்ளைதான்

நம்மை கண்ணின் மணிபோல் இறைவன் காப்பது

என்றும் உண்மைதான்