இறைவனே வானக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனே வானக விருந்து தந்தார்

இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்

இறைவனின் படியேறி என்னைத் தந்தேன் விருந்துண்டேன்

உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்


1. எந்தன் நாவில் தினம் வந்திடுவார்

எந்தன் நெஞ்சில் என்றும் தங்கிடுவார்

உந்தன் அன்பில் தினம் வளர்ந்திடுவேன்

உன்னில் இன்பம் என்றும் நிலைத்திடுமே

திருவிருந்தே தேனமுதே திருவடி பணிகின்றேன் - 2

மலராக மலர்ந்து வந்தேன் மனதினிலே பூசை செய்தேன் - 2


2. விண்ணின் அருள் என்னில் பொழிந்திடுவாய்

கண்ணின் மணி என காத்திடுவாய்

அன்பின் பாடல் என்றும் இசைத்திடுவேன்

என்னில் தெய்வம் என்றும் மகிழ்ந்திடுமே

தினம்தினம் நான் வருகின்றேன் விருந்தினில் மகிழ்கின்றேன் -2

மலரோடு மகிழ்ந்து வந்தேன் மனதினிலே பூசை செய்தேன் - 2