சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் என்னில் பொங்குதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே

சந்தோசம் என்னில் பொங்குதே அல்லேலூயா

இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்

சந்தோசம் என்னில் பொங்குதே (2)


1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப்பழி அதை சுமந்தலைந்தேன் -2

அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே -2

அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே -2


2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான் -2

ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் -2

இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே -2