மனமே இறைவனில் சங்கமம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மனமே இறைவனில் சங்கமம்

மனிதம் உறவிலே சங்கமம்

இளமை தீபமே வாழ்விலே சங்கமம்

நிறைவாழ்வு பெறவே உன்னில் சங்கமம் -2

சங்கமம் சங்கமம் நாதனே நான் உன்னில் சங்கமம் (2)


1. கடல்களே அலைகளில் சங்கமம்

கவிஞனே கவிதையில் உன் சங்கமம்

மனிதனே இறைவனில் சங்கமம்

புனிதனே அயலானில் இறைசங்கமம்


2. நெஞ்சமே நீதியில் சங்கமம்

நேர்மையே உண்மையில் உன் சங்கமம்

திறமைகள் படைத்தோனில் சங்கமம்

உணர்வுகள் உறவிலே இறை சங்கமம்