உன்னை நான் ஒருபோதும் மறப்பதே இல்லை உனக்காக உன்னில் இருக்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னை நான் ஒருபோதும் மறப்பதே இல்லை

உனக்காக உன்னில் இருக்கின்றேன் (2)

உன் அன்பன் இயேசுவே நான் இருக்கின்றேன் -2

உன் நண்பன் இயேசுவே அருகில் இருக்கின்றேன் -2


1. பாவியாய் எனதன்பை மறந்து நீ சென்றாலும் - 2

பரிவுடனே தேடி நான் அணைத்துக் கொள்வேன் - உன்னை

பரிவுடனே தேடி நான் அணைத்துக் கொள்வேன்


2. சோதனையாய் வேதனையில் சோர்ந்து நீ துவண்டாலும் - 2

அன்னையாய் அரவணைத்தே காத்திடுவேன் உன்னை

அன்னையாய் அரவணைத்தே காத்திடுவேன்

உண்மை நீதி வாழ்வினிலே எதிர்ப்பு நிதம் வந்தாலும் -2

உறுதி தந்து உன்னையே நான் உயர்த்திடுவேன் - என்றும்

உறுதி தந்து உன்னையே நான் உயர்த்திடுவேன்