உன்னைக் கண்டு உறவாட உன்னை உண்டு உயிர்வாழ ஏங்குகிறேன் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னைக் கண்டு உறவாட

உன்னை உண்டு உயிர்வாழ

ஏங்குகிறேன் இயேசுவே என்னைத் தாங்கிட வா நேசரே (2)

அழைத்தேன் இறைவா இதயம் வருவாய் -2


1. மாறாத பேரன்பு உன் கருணை அது

மலரச்செய்யும் என்னில் உன் திறனை (2)

வாராது வந்த அன்பே இயேசய்யா - உன்னைச்

சேராது வாழ்வு என்னில் ஏதைய்யா (2)


2. யாவர்க்கும் நிறைவாகும் சமாதானம் - அதை

வாழ்வோர்க்குப் பகிர்ந்தளிக்க வரவேணும் (2)

மேகங்கள் மீதமர்ந்து மீண்டும் வரும் - உந்தன்

வருகையின் மகிழ்வூட்டும் விருந்தருளும் (2)