சமர்ப்பணம் செய்தேன் இறைவா உறவினை வளர்க்கும் தூதனாக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சமர்ப்பணம் செய்தேன் இறைவா

உறவினை வளர்க்கும் தூதனாக

என்னையே தந்தேன் தலைவா (2)

சமர்ப்பணம் செய்தேன் இறைவா 3


1. ஒளியினைத் தேடும் விழிகளுக்கு

நம்பிக்கை ஒளியைக் கொணர்ந்திட சமர்ப்பணம் - 3

புன்னகை மறந்த இதழ்களுக்கு

குறையாத மகிழ்வைக் கொணர்ந்திட சமர்ப்பணம் - 3

என்னை ஓர் கருவியாய் ஏற்றிடுவாய்

புதுப்படைப்பாய் மாற்றிடுவாய் (2)


2. உறவுகள் பிரிந்து தவிப்பவர்க்கு

அன்பின் தோழமை கொணர்ந்திட சமர்ப்பணம் - 3

உரிமைகள் இழந்து உடைந்தவர்க்கு

உரிமை வாழ்வினைக் கொணர்ந்திட சமர்ப்பணம் - 3

என்னை ஓர் கருவியாய் ஏற்றிடுவாய்

புதுப்படைப்பாய் மாற்றிடுவாய் (2)