திருவே திருப்பலிப் பொருள்தனையே உன் திருக்கழல் வணங்கித் தருகின்றோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


திருவே திருப்பலிப் பொருள்தனையே உன்

திருக்கழல் வணங்கித் தருகின்றோம் - 2 (2)


2. ஒளிரும் தணலில் உனதெழில் வடிவை

உணர்ந்திடப் புகுந்தோம் அன்பாக (2)

புரிந்திடும் வேள்வி விளைந்திடும் ஒளியில்

புவிதனைப் படைத்தோம் பலியாக - 2


2. ஏழையர் வழங்கும் உளமெனும் தீபம்

ஏந்திட உன்னருள் கனல் வேண்டும் (2)

உலகிருள் அகன்று ஒளிபெற என்றும்

உனைச் சரண் அடையும் வரம் வேண்டும் - 2