தூய நேய ஆவியே வாருமே தேவ அன்பின் அக்கினி ஊற்றுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தூய நேய ஆவியே வாருமே

தேவ அன்பின் அக்கினி ஊற்றுமே

வீதியெங்கும் உமது சேதி சொல்லவே

வேதசாட்சியாக எம்மை மாற்றுமே (2)

ஆலேலூ ஆலேலூ ஆலேலூயா

ஆலேலூ ஆமென் ஆலேலூயா (2)


1. அஞ்சி நடுங்கிய உமது சீடரை அஞ்சா நெஞ்சராய் மாற்றிய ஆவியே

அறைகள் மூடியே அடங்கிய சீடரை

தடைகளைத் தகர்க்கும் உறுதி தந்த ஆவியே

வார்த்தையாலே வாழ்வு தந்த வல்ல ஆவியே

வையம் உய்ய நான் உழைக்க ஆற்றல் தாருமே (2) -1


2. பேச அஞ்சிய உமது சீடரை அன்னிய மொழிகள்

பேசச் செய்த ஆவியே

அலகை விரட்டிட தயங்கிய சீடரை அலகை கண்டுஅஞ்சி

நடுங்கச் செய்த ஆவியே - வார்த்தையாலே...


3. விலங்கும் சிறைகளும் முடக்கிய சீடரை விடுதலை தந்து

அனுப்பி வைத்த ஆவியே

அரசும் ஆட்சியும் அரட்டிய போதிலும் சிறப்பாய் பணிசெய்ய

உறுதி தந்த ஆவியே - வார்த்தையாலே...