அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுள் சிறந்தவள் நீயே மாமரியே நீ வாழ்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

பெண்களுள் சிறந்தவள் நீயே மாமரியே நீ வாழ்க

அன்னையே வாழ்க வாழ்க லூர்தன்னையே வாழ்க வாழ்க - 2


1. வாழ்வில் கருணையாய் வந்திடுவாய்

வறியவர் துயரம் தீர்த்திடுவாய்

உமையை இழந்து உழல்வோர்க்கு

உலகம் காண வழிசெய்வாய்

உள்ளங்கள் இணைந்தே போராடும்

மனிதர்க்குத் துணையாய் நின்றிடுவாய் (2)

உறவில் மலரும் வாழ்வாக

உண்மை வழியைக் காட்டிடுவாய் - அன்னையே


2. மனதினில் நம்பிக்கை வளர்த்திடுவாய்

மனிதம் காத்திட துணை செய்வாய்

ஊமைக் குரலாய் எழும்போது

அடிமைச் சிறையைத் தகர்த்திடுவாய்

விடியலுக்காகவே வாழ்ந்திடவே

விடுதலைத் தாயாய் அருகிருப்பாய் (2)

மண்ணில் மகத்துவம் கண்டிடவே

மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாய் - அன்னையே