அருள்நிறை மாமரியே எம்மை அரவணைத்தாளும் அன்னையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள்நிறை மாமரியே எம்மை

அரவணைத்தாளும் அன்னையே

வாழ்க வாழ்க மரியே புது வாழ்வின் மாதிரியே - 2


1. நலன்களின் நாதன் இயேசுவையே

நானிலந்தனிலே கொணர்ந்தவளே (2)

வரங்களின் வாய்க்கால் நீர் என்றே

உணர்ந்துகொண்டோம் அம்மா - அவர்

விலங்கினைத் தகர்க்க மீட்பரின் பணியில்

பங்கேற்கும் பொருட்டு இரட்சகியே


2. கலங்கிடும் நெஞ்சைத் தேற்றுகின்ற கலங்கரையாகத் திகழ்பவளே -2

பரிந்துரை தந்து பாசமுடன் எம் குறை தீருமம்மா - நல்

வானக உறவின் ஊடகம் நீயே

எம் செபத்தை விண்ணில் சேருமம்மா