திருமலர்ப் பாதம் பணிந்தேன் என்னில் திருவருள் புரிந்திடும் பரம் பொருளே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


திருமலர்ப் பாதம் பணிந்தேன் என்னில்

திருவருள் புரிந்திடும் பரம் பொருளே (2)

திருமலர்ப் பாதம் பணிந்தேன்


1. மறைதனை புவிதனில் பரப்பிடவே என்

திறன்களை உம்மிடம் அளிக்க வந்தேன் ஆ (2)

கறை என்னில் நீங்கி நான் வாழ்ந்திடவே

திருவருள் பொழிந்திடுமே உந்தன் நிறையருள் பொழிந்திடுமே


2. பிறர் நலம் போற்றிடும் வாழ்வினிலே உம்

திருமுகத் தரிசனம் நான் காண்பேன் ஆ (2)

நிறைவளம் கூட்டிடும் வானரசை

நிலம் தனில் வளர்த்திடுவேன் உந்தன் அருள்தர வேண்டுகிறேன்