மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மா மணியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மாமறை புகழும் மரியென்னும் மலரே

மாதரின் மா மணியே (2)


1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து

அவனியைக் காத்த அன்னையரே (2)

உருவிலா இறைவன் கருவினில் மலர

உறைவிடம் தந்த ஆலயமே


2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து

ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)

இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி

வானக வாழ்வை அளிப்பாயே