எளிய உள்ளம் படைத்த நாமும் பேறுபெற்றவரே இறை அரசு என்றும் ஏழைகள் நமக்கே பேறுபெற்றோமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எளிய உள்ளம் படைத்த நாமும் பேறுபெற்றவரே

இறை அரசு என்றும் ஏழைகள் நமக்கே பேறுபெற்றோமே (2)


1. துயரம் தாங்கும் சமூகம் நாமும் பேறுபெற்றவரே

தந்தை இறைவன் ஆறுதல் தருவார் பேறுபெற்றோமே (2)

சாந்தமுள்ள மாந்தர் நாமே பேறுபெற்றவரே

இந்த மண்ணின் மைந்தர் என்றும் நாமே பேறுபெற்றோமே(2)


2. நீதிக்காக ஏங்கும் நாமும் பேறுபெற்றவரே

நிறைவு கண்டு நிலைத்து வாழ்வோம் பேறுபெற்றோமே (2)

இரங்கும் நெஞ்சம் கொண்ட நாமும் பேறுபெற்றவரே

இறைவன் இரக்கம் நம்மில் நிறையும் பேறுபெற்றோமே (2)