எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா

உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா (2)


1. உள்ளம் உடைந்தவர் உருக்குலைந்தவர்

உமதாற்றல் பெற்றிட வேண்டும்

உறவை இழந்தவர் ஒதுக்கப்பட்டவர்

உன் துணையில் எழுந்திட வேண்டும்

இருளினை அகற்றவும் விலங்கினை உடைக்கவும் -2

நீதி நேர்மை உணர்வு ஓங்க நிம்மதியே வாழ்வில் தொடர

எம்மை உமது கருவியாக்கும்


2. மனித நேயங்கள் மதிக்கும் பண்புகள்

மனதில் தினம் வளர்த்திட வேண்டும்

இறைவன் வார்த்தையில் இனிதோர் ஆட்சியை

இம்மண்ணில் கட்டிட வேண்டும்

பிரிவுகள் நீங்கவும் ஒற்றுமை ஓங்கவும் -2

உண்மை அறிவு என்றும் வாழ உரிமை வாழ்வு நிறைவு காண

எம்மை உமது கருவியாக்கும்