ஆ ஈதென்ன மா நவம் ஆர்கலிசூழ் பூவினில் தீயரான எம்பவம் தீர்க்க அல்லிராவினில்


ஆ ஈதென்ன மா நவம் ஆர்கலிசூழ் பூவினில்

தீயரான எம்பவம் தீர்க்க அல்லிராவினில்

வானிறை மானிடனானாரே

குளோரியா இன் எக்ஸ்ச்செல்ஸிஸ் தேயோ


1. சீர் வெல்லைப் பொகுட்டினில் தீதில் நித்ய கன்னிகை

ஏர் மருவ கட்டினில் ஈறில்லாத மாதகை


2. சூழ்ந்தமரர் பாடவே சோகின் வல்லபங் கெட

வேந் தெரோது வாடவே மெய்மறை துலங்கிட


3. ஆயரடி பேணவே அற்புத பந் தோன்றிட

இராயர் மூவர் காணவே எங்கும் நல மூன்றிட