திருப்பலியில் என்னைத் தந்திடுவேன் நான் திருமகனின் உறவில் வாழ்ந்திடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


திருப்பலியில் என்னைத் தந்திடுவேன் நான்

திருமகனின் உறவில் வாழ்ந்திடுவேன் (2)

எந்தன் சிந்தனை சொல் செயல் அனைத்தும்

அர்ப்பணமாக்கிடுவேன் (2) நானும் அர்ப்பணமாகிடுவேன்


1. உடைந்த உள்ளம் உனைத் தேடும் நெஞ்சம்

உமக்குப் பலியாய்த் தருகின்றேன் நாளும் (2)

உந்தன் அருளும் - 2 ஆசீரும் சேர்ந்து

உன்னதப் பலியாய் மாற்றிடுமே உவந்தென்னை ஏற்றிடுமே


2. உழைப்பின் பயனும் நிலம் தந்த விளைவும்

அப்பமும் இரசமும் தருகின்றேன் நாளும் (2)

உன்திரு மகனில் - 2 இணைந்திடும் என்னை

உன்னதப் பலியாய் மாற்றிடுமே உவந்தென்னை ஏற்றிடுமே