நமக்கு மிக முக்கியமான பகுதி

" அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது.

ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. பறவைநாகத்தின் வாயினின்று பாய்ந்த பெருவெள்ளத்தை அது தன் வாயைத் திறந்து உறிஞ்சிவிட்டது.

ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் " திருவெளி 12 : 15-17

சிந்தனை : பறவை நாகம் தன் வாயினின்று ஆறு போல தண்ணீர் பாயச்செய்தது...

1. இதுதான் அன்னைக்கு எதிராக பிரிவினை சபையினர் கடந்த 50 ஆண்டுகளாக தூற்றும் அவதூறுகள்..

2. "நிலம் அப்பெண்ணுக்கு துணை நின்றது" - அதுதான் மிச்சம் இருக்கும் கத்தோலிக்கர்களாகிய நாம்.

3. " பறவை நாகம் பெண்மீது சினங்கொண்டு எஞ்சிய அவளது பிள்ளைகளுடன் போருக்கு சென்றது..

எஞ்சிய பிள்ளைகள்தான் நாம்...

இந்த போரில் அலகையை எதிர்த்து நின்று போர் செய்யாமல் அலகையிடம் தோற்று " அவர்ட்ட ஜெபிச்சா கேட்கும்... இவர்ட்ட ஜெபிச்சா குணமாகும்.. அங்கே அற்புதம் நடக்குது... இங்கே அற்புதம் நடக்குது... என்று அந்த சபை, இந்த சபை ஏன் பொய்பேசும் போதகரைக்கூட தேடி இன்றும் கத்தோலிக்கர் பலர் ஒடிக்கொண்டு இருக்கிறார்கள்...

மாதாவோடு நின்று சோதனைகளைத் தாங்கிக் கொண்டு ஜெபமாலை ஜெபித்து வீரத்தோடு போராட பலர் தயாராக இல்லை...

உலக வாழ்க்கை ஒரு சோதனைக் காலம்... Test period.. உலக வாழ்க்கை ஒருவன் நூறு வயது வரை வாழ்ந்தாலும் கடலின் ஒருதுளி.. கடல்தான் மோட்சம்.. நிலைவாழ்வு..

இதை மறந்து இந்த உலகில் வாழும்போது பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று.. நம்முடைய சோதனைகளை வீரத்தோடும் விசுவாசத்தோடும் தாங்கி சாட்சிய வாழ்க்கை வாழ்ந்து ஒவ்வொரு நாளும் நம்மை மோட்சத்திற்கு தயாரிக்காமல்...

கவலை, கஷ்டம், துன்பங்கள், கடன், குடும்பத்தில் பிரச்னை, வீடு, வசதி, என்று ஏதேதோ காரணங்களுக்காக கத்தோலிக்க திருச்சபையை விட்டு ஓடும் கத்தோலிக்கர்களுக்கு என்னவென்று சொல்லுவது...

ஏன் நம்முடைய ஆலயங்களில் அன்றாட திருப்பலியில் சாதாரண வெண்சிறு அப்பம் ஆண்டவர் இயேசுவாக மாறி உயிருள்ள கடவுள் உயிருள்ள உணவாக நம்மைத் தேடிவருகிறாறே... அது அற்புதம்.. அதியசயமாகத் தெரியவில்லையா...?

மேலும் கத்தோலிக்க திருச்சபையில் பல இடங்களில் பலர் குணம் பெறுவதும், மனிதனால் கண்டுபிடிக்க முடியாத பல அற்புதங்கள் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா??

போகிறவர் போகட்டும் இறுதிவரை நிலைத்து நிற்பவர் பேறு பெற்றவர்கள்...

"தெளிந்த மனத்தோடு விழிப்பாயிருங்கள்: ஏனெனில், உங்கள் எதிரியான அலகை, கர்ச்சிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.

விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதை எதிர்த்து நில்லுங்கள்: 1 இராயப்பர் 5:8,9

அவனிடம் மாட்டாய் விழிப்பாய் இருப்பவர்கள் யாரோ...

தெளிந்த மனம், உறுதியான உள்ளம், போராடும் குணம் இருந்தால்தான் அதை எதிர்த்து நிற்க முடியும்...

மேலும் அலகையின் பரம எதிரியான ( ஆதி 3: 15) மாதாவின் துணை நமக்குத் தேவை... மாதா நமக்குத்துணையாக வலிமையோடு போர் செய்ய நாம் ஜெபமாலை ஜெபிக்கும் போர் வீரர்களாக இருக்க வேண்டும்...

நாம் " கடவுளுடைய கட்டளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டவர் இயேசுவை விசுவசித்து, மாதாவின் உண்மையான பிள்ளைகளாக அதாவது காரிய பக்திக்கு மட்டும் மாதாவைப் பயன்படுத்தும், ஜெபமாலை ஜெபிக்காத போலி பக்தர்களாக வாழாமல் மாதாவின் உண்மை பக்தர்களாக, உண்மைப் பிள்ளைகளாக வாழ்வோம்.. நாளும் போராடும் போர்வீரர்களாக வாழ்வோம்...

விளக்கம் நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்..

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!