♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எதைக் கொடுப்பேன் நான் காணிக்கையாக - நீர்
எனக்கு கொடுத்ததையே கொடுத்து மகிழ்ந்தேன் (2)
கொடுப்பதில் நான் இழப்பதில்லை 2
இதுவே எமது வாழ்வின் பாடமாம்
1. அடிமை நீங்கள் என அழைப்பதில்லை
அன்பர் நண்பர் உறவு சொல்வேன் (2)
உறவு வாழ்வில் உடைந்த உள்ளத்தை 2
உம்மிடம் தந்து ஒப்புரவாகுவேன்
2. உலகம் தருகின்ற அமைதி அல்லாது
உமது அமைதி எமக்குத் தாரும் (2)
உலகில் துயரம் அழுகை உண்டு 2
உம்மால் எமக்கு மகிழ்ச்சி உண்டு