நீர் தந்த வாழ்க்கையிது உன் கருணை மூச்சு இது என்னில் வாழும் என்னிறைவா எதை உனக்கு நான் தருவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீர் தந்த வாழ்க்கையிது உன் கருணை மூச்சு இது

என்னில் வாழும் என்னிறைவா எதை உனக்கு நான் தருவேன் 2

ஏற்றுக்கொள்ளும் என் தேவா

என்னையே நான் தருகின்றேன்

ஏற்றுக்கொண்ட என் வாழ்வை

என்றும் உமதாய் மாற்றிடுமே 2


1. சோர்ந்துபோன மனதினையே ஏந்தி பீடம் வந்தேன் அதை

மாற்ற வேண்டி கேட்டேன்

எனை அழைக்கும் சுமைகளையே தாங்கி பீடம் வந்தேன்

அதை ஏற்க வேண்டி கேட்டேன்

எம்மிடம் நீர் என்ன வேண்டும் என்று கேட்கிறீர்

எதனைக் கொடுக்க என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன்

என்னிடம் உள்ளதோ எந்தன் வாழ்வு ஒன்றேதான்

ஏற்றுக்கொள்ளும் ... ...


2. நிலத்தில் விளைந்த கனிகளையே காணிக்கையாய்த் தந்தேன்

அதை ஏற்க வேண்டிக் கேட்டேன்

உலகில் சிறந்த பொருட்களையே உந்தன் பாதம் வைத்தேன்

அதை உமதாய் மாற்றக் கேட்டேன் - எம்மிடம் நீர்...