ஆண்டவனே என்று உம்மை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவனே என்று உம்மை அழைக்கிறேன்

என் ஆதங்கத்தை உன்னிடத்தில் சொல்கிறேன் (2)

தீண்டாமை என்னும் நோயை ஒழிக்கணும் - 2 இந்த

தேசம் எங்கும் சமத்துவமே மலரணும் - 2


1. மனிதம் மக்கள் மனதில் பதியணும் - அவர்

மாண்புடனே வாழ வழி வகுக்கணும் (2)

இனியும் மத வேறுபாடு நீக்கணும் - ஐயா

இந்தச் சமுதாயம் முன்னால் வளரணும் - 2


2. உண்மை வாழ்வை உறுதியாக நம்புவோம் - இன்று

உரிமை அறிந்து உன்னதராய் வாழுவோம் (2)

கண்ணிமைபோல் காப்பதுமே இயேசுதான் - அவர்

கருத்தை உணர்ந்து நடப்பதுவே நலமாகும் -2