வாருங்கள் நம் ஆண்டவர்க்கு 95

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாருங்கள் நம் ஆண்டவர்க்கு

புதியதோர் பாடல் பாடிடுவோம் (2)

மீட்பளிக்கும் ஆலயம் அவரே

மகிழ்ந்து பணிந்து பாடிடுவோம் -2


1. புகழ்ப்பாக்கள் இசைத்துக் கொண்டு அவர் திருமுன் செல்லுவோம் (2)

இன்னிசை கீதங்கள் முழங்கிடவே

அவர் திருமுன் அகமகிழ்வோம் (2)

ஏனெனில் அவரே நம் கடவுள்

என்றென்றும் உள்ளது அவர் இரக்கம் (2)

அன்பாலே நமைக் காக்கும் ஆண்டவர்திருமுன் பணிந்திடுவோம்


2. ஆண்டவர் அவரை எந்நேரமும்

நம் கண்முன் கொண்டிருப்போம் (2)

அவர் நம் மனத்தோடு இருப்பதனால்

என்றும் அசைவுறுவதில்லை (2)

அவரே நமது உரிமைச் சொத்து அவரே நமது திருக்கிண்ணம் (2)

அகமகிழ்வோம் அக்களிப்போம்

வாழ்வின் வழியைக் கண்டுகொள்வோம்