வாழ்வோரின் நாட்டில் 27

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழ்வோரின் நாட்டில்

ஆண்டவரின் நலன்களை நான் காண்பேன் (2)


1. ஆண்டவர் என் ஒளி அவரே என் மீட்பு

யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? (2)

ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம் -2

யாருக்கு நான் நடுங்க வேண்டும்? -2


2. ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்

அதையே நான் நாடித் தேடுவேன் (2)

ஆண்டவர் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்? -2

ஆண்டவர் அழகை நான் காண வேண்டும்?

அவரது திருவுளம் அறிய வேண்டும்