ஆண்டவரே உம்பேரன்பைக் காட்டி 85

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே உம்பேரன்பைக் காட்டி எங்களை நீர் மீட்டருளும்-2


1. ஆண்டவராம் என் இறைவன் சொல்வதைக் கேட்பேன்

மக்களுக்கும் அடியாருக்கும் நிறைவாழ்வை

என்றும் வாக்களித்தார்

அவருக்கஞ்சி நடப்போர்க்கு மீட்பு அண்மையில் உள்ளது -2


2. பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்

நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்

இதனால் நாட்டில் அவரது மாட்சிமை என்றும் குடிகொள்ளும் -2