ஆண்டவரே உம் முகத்தின் 4

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச்செய்யும்-2


1. எனக்கு நீதி அருள்கின்ற என் கடவுளே

நான் மன்றாடும்போது எனக்கு பதிலளியும்

நான் நெருக்கடியில் இருந்தபோது

நீர் எனக்கு துணைபுரிந்தீர் இப்போதும் எனக்கு மனமிரங்கி

என் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும் -2


2. நலமானதை எங்களுக்குத் தந்திட யாருளர்?

என்று கேட்பவர் இங்கு பலராய் உள்ளனர்

என் ஆண்டவரே எங்கள் மீது

உம் முக ஒளி வீசச்செய்யும் ஏனெனில்

நாங்கள் தனிமையாய் இருந்தாலும்

நீர் எம்மை வாழச் செய்தீர் - 2