மாநிலத்தோரே பாடுங்கள் 66

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மாநிலத்தோரே பாடுங்கள்

கடவுளைப் போற்றிப் புகழுங்கள் (2)

புதியதோர் ஆண்டு பிறந்ததே புத்துணர்வு நம்மில் மலருதே -2

ஆண்டவரைப் பாடுங்கள் அவரது பெயரை வாழ்த்துங்கள்


1. வானங்கள் யாவும் மகிழட்டும் பூவுலகும் களிகூறட்டும் -2

கடல்அலையும் அதில் வாழ்வனவும் ஆர்ப்பரித்தே புகழ்பாடட்டும்

வயல்வெளியும் அதில் விளைவனவும் கடவுளின் புகழ்பாடட்டும்

பூவுலகாளும் நீதியின் தேவன் ஆட்சியே இங்கு மலர்ந்திடும்

சொல்லுறுதி கொண்டு ஆளாவார்


2. வார்த்தை மனுஉருவாகினார் நம்மிடையே குடிகொண்டுள்ளார் -2

தம்மை ஏற்கும் அனைவருக்கும்

இறைமக்களாகும் உரிமை தந்தார்

நம்மீது இறங்கிவந்து ஆசீரை அளித்திடுவார்

திருமுகத்தின் பேரொளியை அனைவருக்கும் வீசிடுவார்

உலகோர் மெய்வழி உணருவார்