ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே 1

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் -2


1. நற்பேறு பெற்றவர் யார் அவர்

பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்

பாவிகளின் தீயவழி நில்லாதவர்

இகழ்வாரின் குழுவினில் அமராதவர்

ஆனால் அவரோ ஆண்டவன் திருச்சட்டத்தில் மகிழ்ச்சி கொள்வார்

அவரது ஞானமுள்ள சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்


2. நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல்

அவர் இருப்பார் அவர் இருப்பார்

பருவ காலத்தில் கனிதந்து என்றும் பசுமை மரத்திற்கு ஒப்பாவார்

தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்

நேர்மையாளரின் நெறியை என்றும்

கருத்தில் கொள்வார் ஆண்டவர்