அடைக்கலமும் ஆற்றலுமாய் கடவுள் தி.பா.46

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அடைக்கலமும் ஆற்றலுமாய் கடவுள் இருக்கின்றார்

துன்பம் வரும் வேளையிலும் துணையாய் வருகின்றார்

நிலம் அதிர்ந்திட அலைகள் எழுந்திட

அவர் கரம் கொண்டு தாங்குவார் (2)


1. யாக்கோபின் கடவுளவர் சேனைகளின் ஆண்டவரே

நம்மோடு இருக்கின்றார் (2)

உலகின் கடைஎல்லையில் போரைத் தடுக்கின்றவர்

நம்மை அரவணைத்து அமைதி தருகின்றார்


2. திருநகரின் நடுவினிலே உன்னதரின் உறைவிடமே

பேரின்பப் புகலிடமே (2)

கடவுள் புறம்முழங்கவே பெரும் படையும் பொறியானது

அவராற்றல் நமதாகவே பெருந் துயரம் புறம் கண்டது