ஆர்ப்பரித்து அக்களியுங்கள் தி.பா.12

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆர்ப்பரித்து அக்களியுங்கள் - 4

இஸ்ராயேலின் ஆண்டவர் சிறந்து விளங்குவார்- 2


1. இறைவன் என் மீட்பர் அவரே என் ஆற்றல்

நான் பாடிடுவேன் அஞ்சமாட்டேன் என் மீட்பும் அவர் தானே (2)

மீட்பருளும் ஊற்று நீரை முகர்ந்து கொள்வீர்கள்

முகர்ந்து கொள்வீர்கள் நீங்கள் முகர்ந்து கொள்வீர்கள்


2. ஆண்டவர்க்குப் புகழ்பாடுங்கள் மாட்சியுறும் செயல்புரிந்தார் இதை

அனைத்துலகும் அறிந்து கொள்ளும்

அவர் திருப்பெயரைப் போற்றுங்கள் (2)

சீயோனில் குடியிருப்போர் ஆர்ப்பரித்துக் களிகூறுங்கள்

ஆர்ப்பரித்துக் களிகூறுங்கள் நீங்கள் ஆர்ப்பரித்துக் களிகூறுங்கள்