இறைவன் எனது மீட்பானார் 26

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார்

அவரைக் கொண்டு நான் வாழ எவரைக் கண்டும் பயமில்லை (2)


1. வாழ்வில் இறைவன் துணையானார் வாடும் எனக்கு உயிரானார்-2

தீயோர் என்னை வளைத்தாலும் தீமை அணுக விடமாட்டார் - 2


2. தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும்-2

தேவன் அவரைத் திடமாக தேடும் எனக்குக் குறையேது - 2