ஆண்டவர் என் ஆயன் தி.பா.23

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் என் ஆயன் எனக்குக் குறைவில்லை -2

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கின்றார்

ஆண்டவர் என் ஆயன்


அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

எந்தன் களைப்பை ஆற்றுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார் ஆண்டவர் என் ஆயன்


2. நேரிய வழியில் என்னை நடத்திச் செல்கின்றார் ...

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஆண்டவர் என் ஆயன்

நடக்க நேந்தாலும் பயமில்லை ஆண்டவர் என் ஆயன்

ஏனெனில் என்னோடு இருக்கின்றார் ஆண்டவர் என் ஆயன்


3. எண்ணெய் பூசி அபிஷேகம் செய்தார் ஆண்டவர் என் ஆயன்

என் கிண்ணம் மகிழ்வால் நிரம்பிடுதே ஆண்டவர் என் ஆயன்

உன்னருள் நீதியும் எனைத் தொடரும் ஆண்டவர் என் ஆயன்

வாழ்நாளெல்லாம் எனைத் தொடரும் ஆண்டவர் என் ஆயன்


ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது - 2

நீண்ட பசும்புல் தரை சேர்ப்பார்

குளிர் நீர் நிலைக்கெனை அவர் நடத்திச் செல்வார்

ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது

ஆண்டவர் என் ஆயன்


1. ஆன்ம வாழ்விற்குயிர் தந்திடுவார் அறநெறி தனிலே ஒழுகச் செய்வார் - 2

நானிருள் சூழும் பள்ளத்தாக்கில் நடக்கநேர்ந்தாலும் பயமே இல்லை

ஏனெனில் என்னுடன் நீர் இருக்கின்றீர்

எனை நின் கோலும் கழியும் தேற்றும்


2. என் பகையாளர் முன் எனக்காக இனிய நல் விருந்தை ஒழுங்கு செய்தீர் - 2

என் தலை மீது எண்ணெய் பூசி எனை அபிஷேகம் சேய்தே வைத்தீர்

என்னே எனது பாத்திரம் நிறம்பி

எத்துனை இன்பம் வழியுது பொங்கி


3. என் புவி வாழ்வின் ஒவ்வொரு நாளும்

எனைப் பின் தொடரும் உம் பேரன்பு

என்றும் ஆண்டவர் வீட்டினில் உறைவேன்