ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் தி.பா.103

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் மீது

அவர் இரக்கம் என்றென்றும் நிலைக்கும் (2)


1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

என் அகத்துள்ளதெல்லாம் அவர் திருப்பெயரை வாழ்த்துவதாக

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

அவர் செய்த நன்மைகளை எல்லாம் மறவாதே


2. அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னிக்கின்றார்

உன் நோய்களை எல்லாம் குணமாக்குகின்றார்

உன் உயிரை அழிவினின்று மீட்கின்றார்

அருளையும் இரக்கத்தையும் எனக்கு முடியாகச் சூட்டுகின்றார்