சபைநடுவே இறைவனைப் புகழ்ந்திடுவோம் 22

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சபைநடுவே இறைவனைப் புகழ்ந்திடுவோம்

உலகெங்கும் அவர் பெயர் அறிவிப்போம்

பணிந்து வாழ்ந்திடுவோம் மாட்சி கண்டிடுவோம்

ஆண்டவர்க்கு அஞ்சிடுவோம் அவரை வணங்கிடுவோம் -2


1. எளியோர் நம் சிறுமைதனை அற்பமென அவர் எண்ணவில்லை

தம் முகத்தை மறைக்காது மன்றாட்டைக் கேட்கின்றார்

மாபெரும் சபையில் விண்ணதிர இறைபுகழ்ச்சி முழங்கிடுவோம்

இறைவனுக்கஞ்சுவோர் முன்னிலையில்

பொருத்தனைகள் செலுத்திடுவோம்


2. எளியோர் நிறைவு கண்டிடுவர் இறைவனைப் புகழ்ந்து பாடிடுவர்

பூவுலகின் மாந்தர் எல்லாம் ஆண்டவர் பக்கம் திரும்பிடுவர்

மண்ணில் செல்வர் யாவருமே அவரைப் பணிந்து வாழ்ந்திடுவர்

விண்ணின் வேந்தனைத் தொழுதிங்கே

தலைமுறை யாவும் மகிழ்ந்திடுமே