குறைபட்ட வாழ்வில் வாடுகின்றேன் 55

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


குறைபட்ட வாழ்வில் வாடுகின்றேன்

என் துணைநிற்க வாரும் என் தேவனே (2)

முறையீடு பலவும் மன்றாட்டு பலவும்

நிறைவாக்க வேண்டிநின்றேன் நின்பதம் பணிந்து நின்றேன்


1. கவலைகள் என்னை ஆட்டும்போது

சினமுற்ற எதிரிகள் பொல்லாரின் ஒடுக்குதல் (2)

அச்சம் நடுக்கம் ஆட்கொள்ளும்போது

சாவின் திகில் என்னைக் கவ்விடும்போது

உள்ளம் உடைந்து உருக்குலைந்தேனே 2


2. புறாவின் சிறகினை அளித்திடுவாயோ

பறந்து சென்று புகலிடம் காண்பேன் (2)

நகரின் வன்முறை குழப்பங்கள் யாவும்

புயலின் காற்றால் அடித்திடும்போது

புகலிடம் தேடி விரைந்திருப்பேனே - 2