சீயோனிலே புகழ் பாடுவேன் 65

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சீயோனிலே புகழ் பாடுவேன்

பணிந்துன்னைத் தொழுவேன் என் பளுவெல்லாம் சுமந்தாய்

இதயத்திலே உனைத் தாங்கினேன்

உனதருகில் வாழ்கின்ற வரமெனக்கு நீ தந்தாய் -என் தேவா...


1. மீட்பின் கடவுள் கேட்பதைத் தருவார் -2

நம்பிக்கை தீபம் ஆற்றலும் ஊற்று

அமைதியின் ரூபம் அருளொளி கீற்று

அலையின் ஓசை அடங்கச்செய்யும் தேவன்

கிழக்கும் மேற்கும் மகிழ வைக்கும் ஆதவன்

எங்கெங்கு பார்த்தாலும் என் தேவன் கைவண்ணம்

எனது வாழ்வும் வழியுமான இறைவனே


2. கடவுளின் ஆறு கரைபுரண்டோடும் ஆ -2

பசுமைப் புரட்சி நீர்நிலைக் காட்சி

வளமையும் செழுமையும் இறைஅன்பின் சாட்சி

பாலைநிலமும் மேய்ச்சல் வெளியாய் மாறும்

பாறைமீது விதைகள் விழுந்து வாடும்

எங்கெங்கு பார்த்தாலும் என் தேவன் கைவண்ணம்

எனது முதலும் முடிவுமான இறைவனே