உம்மில் அடைக்கலம் தேடி 16

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உம்மில் அடைக்கலம் தேடி வந்தேன்

இறைவா என்னைக் காத்தருளும் (2)


1. என்னோடு வாழும் தலைவன் நீரே

நிலையான செல்வமாய் உனை அடைந்தேன் (2)

தூயோர் அணியில் இன்பம் கொள்வேன் - 2

அனுதினம் உன்னடி திரும்பிடுவேன் (நான்) -2


2. ஆண்டவர் நீரே என் உரிமை சொத்து

அறிவுரை வழங்கும் உனைப் போற்றுவேன் (2)

உன் துணை இருப்பதால் கலங்கமாட்டேன் - 2

மகிழ்ச்சியின் துள்ளலில் புகழிசைப்பேன் (நான்) -2


3. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்

நிறைவான மகிழ்வை உனில் காணுவேன் (2)

உன்னுடன் இருப்பதில் பெருமை கொள்வேன் -2

எப்போதும் மனதுக்குள் உனைத் தொழுவேன் (நான்) -2