இஸ்ராயேலின் மேய்ப்பரே எனக்கு 80

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இஸ்ராயேலின் மேய்ப்பரே எனக்கு தயவாய் செவிசாயும்

ஆயனே நல்ஆயனே எனக்கு தயவாய் செவிசாயும்

இஸ்ராயேலின் மேய்ப்பரே


1. சுமைகள் சுமந்து வாடும்போது எம்மைக் காக்க வந்தருளும் -2

வாழ்வு வழங்கும் வல்லவா மீட்பு எனக்குத் தந்தருளும்


2. இன்று இறைவா மீண்டும் வாரும்

எம்மைக் கண்ணோக்கிப் பார்த்தருளும் (2)

உமது அருகில் நிறுத்தி எம்மை உமது கரத்தால் காத்தருளும்


3. உம்மை அகன்று போகவில்லை

வாழ்வை எமக்கு அளித்தருளும் (2)

உமது விடுதலை நான் பெற உமது ஒளியைக் காட்டுமய்யா