ஆண்டவரில் அகமகிழ்ந்திடுங்கள் 148

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரில் அகமகிழ்ந்திடுங்கள் அல்லேலூயா

அவர் பெயரை என்றும் போற்றிடுங்கள்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா


1. தூதர்களே அவர் படைப்புகளே புகழுங்கள்

வானங்களே குளிர் மேகங்களே புகழுங்கள்

கதிரவனே ஒளிர் மேகங்களே புகழுங்கள்

விண்மீனே ஒளி மின்னல்களே புகழுங்கள்


2. பனித்துளியே கொட்டும் நீர்த்திரளே புகழுங்கள்

சுடும் நெருப்பே கொடும் புயல் காற்றே புகழுங்கள்

பெரும் மழையே உயர் குன்றுகளே புகழுங்கள்

விலங்குகளே மரக்கன்றுகளே புகழுங்கள்