ஆண்டவரின் அன்பை நினைந்து 116

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரின் அன்பை நினைந்து நினைந்து - 2

ஆல்லேலூயா -3 பாடுகிறேன் (2)


1. சாவின் கயிறுகள் கட்டுண்ட போதும்

வாழ்வின் நம்பிக்கை இழந்திட்டபோதும் (2)

துன்பப் பாதாளம் விழுங்கிய போதும் -2

ஆண்டவர் பெயரைத் தொழுது போற்றினேன் -2


2. எளிய மனத்தோர் ஏற்றம் காண்பர்

தாழ்நிலை மனிதர் வாழ்வினைப் பெறுவர் (2)

அமைதி கொள் நெஞ்சே ஆண்டவர்மீதே -2

நன்மைகள் செய்து நலமே காப்பார் -2