நீ போகும்போதும் காப்பார் 121

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீ போகும்போதும் காப்பார் வரும்போதும் காப்பார்

இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார் (இயேசு) -2 (2)


1. உனக்குதவி ஆண்டவரிடம் இருந்து வரும்

வானமும் வையமும் படைத்தவர் அவரே (2)

உன் கால்கள் இடறவே விடமாட்டார் - 2

உன்னைக் காக்கும் தேவன் அவர் உறங்கிடமாட்டார் -2


2. இஸ்ராயேலைக் காக்கும் தேவன் அயர்வதில்லை

உன்னைக்காக்கும் தேவன் அவர் உறங்குவதில்லை (2)

தீமையெல்லாம் விலக்கி உம்மைக் காத்திடுவார் -2

உன் வலப்புறத்தில் அமர்ந்து உம்மைப் பாதுகாக்கிறார் -2