நன்றி நன்றி ஆண்டவரே 107

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி நன்றி ஆண்டவரே நன்மை நன்மை நிறைந்தவரே

என்றும் உள்ளது பேரன்பே எல்லா நாவிலும் உன் அன்பு


1. பசியின் பிடியில் தாகத்தின் தாக்கத்தில்

சோர்வுற்றுக் களைத்து சோகம் கண்டோம் (2)

நெருக்கடி நிறைந்து நெஞ்சினில் கனத்து

சாவின் பிடியில் கிடந்திருந்தோம் (2)

பெற்றபெரு வாழ்வை நினைந்து நினைந்து -2

நன்றி சொல்லி பாட வந்தோம் -2


2. வெண்கலக் கதவு விருந்து தாள்களும்

மண்மீது மனிதரை அழுத்துகையில் (2)

வீசும் புயலினை பூந்தென்றலாக்கி

ஆசீர் வழங்கிய ஆண்டவராம் -2

பெற்றபெரு வாழ்வை நினைந்து நினைந்து -2

நன்றி சொல்லி பாட வந்தோம் -2