ஆண்டவரின் திருச்சந்நிதியில் அஞ்சாமல் 100

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரின் திருச்சந்நிதியில் அஞ்சாமல் நிற்பவர் யார்?

அருள் நிறைந்த அவர் ஆசிகளை அன்றாடம் பெறுபவன் யார்?


1. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன்

மாண்புறு செயல்களைச் செய்கிறவன்

அவனை இறைவன் என்றும் அணைத்து ஆசீர்வதித்திடுவார்


2. தீயோர் கூட்டத்தில் சேராதவன் தீமைகள் ஏதும் செய்யாதவன்

அவனை இறைவன் என்றும் அணைத்து ஆசீர்வதித்திடுவார்


3. வாக்குறுதி என்றும் மாறாதவன்

வார்த்தையில் வஞ்சம் இல்லாதவன்

அவனை இறைவன் என்றும் அணைத்து ஆசீர்வதித்திடுவார்


4. எளிமையாய் இனிமையாய் வாழ்கிறவன்

ஏழ்மையாய் தூய்மையாய் இருக்கிறவன்

அவனை இறைவன் என்றும்

அணைத்து ஆசீர்வதித்திடுவார்