ஆண்டவருடைய காலத்தில் நீதி 72

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும் - 2

கடவுளே அரசர்க்கு உமது நீதி வழங்க ஆற்றல் தாரும்

அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்

அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக -2

உமது எளியோர்க்கு நீதித் தீர்ப்பு வழங்குவாராக -2


1. ஏனெனில் தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகள் அனைவரையும்

திக்கற்ற எளியோரை அவரே என்றும் விடுதலை செய்திடுவார்

வறியோர்க்கும் ஏழைகட்கும் இரக்கம் காட்டுவார் 2

ஏழைகளின் உயிரினை என்றும் அவரே காத்துக்கொள்வார் -2