புனித ஜெரோம் அவர்களின் உண்மை சாட்சியம்

வயது முதிர்ந்த வயதில் புனித ஜெரோம் அவர்கள் ஒரு கிறிஸ்துமஸ் இரவில் பெத்லேகமில் சேசு பிறந்த குகையில் தியானித்து கொண்டிருந்தார் அப்போது சேசுபாலன் அவருக்கு தோன்றினார் 

சேசுபாலன்: ஜெரோம் எனது பிறந்த நாளில் எனக்கு ஒரு பரிசு தரமாட்டாயா ?

புனித ஜெரோம்: ஆண்டவரே நான் என் இதயத்தை உமக்கு கொடுக்கிறேன் என்றார்

சேசுபாலன் : நல்லது  ஆனால் நான் இன்னும் அதிகமானதை உம்மிடம் விரும்புகிறேன்

புனித ஜெரோம் : என்னிடம் உள்ளவற்றையும் என்னை முழுவதும் உமக்கு கொடுக்கிறேன் ஆண்டவரே என்றார்

சேசுபாலன் : இதை விட இன்னும் அதிகமானதை உம்மால் கெடுக்க முடியாதா 

புனித ஜெரோம் : எல்லா மனிதர்களின் இதயங்களையும் உமக்கு கொடுக்கிறேன் என்றார்

சேசுபாலன் : இன்னும் அதிகமாக எனக்கு கொடும் என்றார் 

புனித ஜெரோம் : ஆண்டவரே என்னிடம் உள்ள அனைத்தையும் ஏற்கெனவே உமக்கு கொடுத்து விட்ட பிறகு என்னிடம் வேறு என்ன இருக்கிறது என்றார்

சேசுபாலன் : உமது பாவங்களை வைத்திருக்கிறீர் அவற்றை எனக்கு கொடும் என்றார் 

புனித ஜெரோம் : ஒ ஆண்டவரே அவற்றால் நான் வெட்கமடைகிறேன் அவற்றை வைத்து கொண்டு நீர் என்ன  செய்ய போகிறீர் என்றார்

சேசுபாலன் : உன் பாவங்களுக்கு மீண்டும் மன்னிப்பு வழங்குவேன் என்றார்

புனித ஜெரோம் : ஒ அப்படிானால் ஆண்டவரே அவை அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் என்றார்

ஆம் இயேசுவில் அன்பானவர்களே நாமும் தாழ்ச்சியோடு நம்மையும் நமது பாவங்களையும் குறைபாடுகளையும் ஆண்டவரிடம் ஒப்புக்கொடுப்போம்  - ஆமேன்