ஒப்புரவு அருட்சாதனம்

திவ்ய நற்கருணை நாதரை பரிசுத்த நிலையில் இருந்து உண்பதற்க்கு நம்மை சுத்திகரிக்கும் ஒப்புரவு திருவருள் சாதனம் ( பாவசங்கீதனம்) கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே உண்டு இது மிகவும் பயனுள்ள அருள் சாதனம்  யோவான் 20:23  ல் இயேசு தம் சீடரை பார்த்து  " எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ " அவை மன்னிக்க படும் , எவருடைய பாவங்களை மன்னியாதிரிப்பீர்களோ அவை மன்னிக்கபடா " என்றார் 

பாவங்களை மன்னிக்க இயேசுவின் சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகபெரும் அதிகாரத்தை நாம் இங்கு காண்கிறோம் , மத்தேயு 23:2 ல் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசேயின் வழியில் வந்து அவரது அதிகாரத்தை கொணடிருப்பது போல இன்று காத்தோலிக்க குருக்கள் இயேசுவின் சீடர்களின் வழிவந்து அவர்களது அதிகாரத்தைக் கொண்டிருக்கறார்கள் எனவே யோவான் 20:23 ல் இயேசுவின் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக பெரும் அதிகாரத்தில் நின்று இன்றைய கத்தோலிக்க குருக்கள் ஒப்புரவு அருட்சாதனம் வழியாக , நாம் அவர்களிடம் சென்று நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கோரும்போது அவர்கள் நம்மை இயேசுவின் நாமத்திலே மன்னிக்கிறார்கள். 

நாமும் தூய்மையாக்கப்பட்டு நம் பாவத்திலிருந்து மன்னிப்பை பெற்றுக் கொள்கிறோம் . அது வழியாக பரிசுத்த திவ்ய நற்கருணையை நாம் உட்கொள்ள தகுதியும் பெற்று கொள்கிறோம் ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது அவர்கள் எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பார்களோ அவை மன்னிக்கப்படா இந்த ஒப்புரவு அருட்சாதனத்தில் மனம் வருந்தி திருந்துதல் என்பது மிக முக்கியமான காரியம்  மனம் வருந்தி திருந்துதலும் மன்னிப்பும் என்றுமே ஒன்றாய் இனைந்து நிற்கிறது எனவே தாருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறை சாற்ற படவேண்டும் என்றும் எழுதியுள்ளது என்று இயேசு சொல்கிறார்  உண்மையாகவே நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தி . திருந்தி இனி அந்த பாவங்களைச் செய்வதில்லை என்ற உறுதியான தீர்மானம் எடுத்துக்கொண்டு கத்தோலிக்க குருக்களிடம் சென்று நம் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருட்சாதனம் வழியாக மன்னிப்பு கோரினால் அவர் இயேசுவின் நாமத்தில் நமக்கு மன்னிப்பு தருகிறார்

இயேசு நமக்காக ஏற்பாடு செய்து தந்த அவரது இரக்கத்தின் கொடைதான் ஒப்புரவு அருட்சாதனம் --ஆமேன்

!! இயேசுவுக்கே புகழ் !! மாமரிதாயே வாழ்க !!