அன்னையின் அருளால் நல்ல பாவசங்கீர்த்தனம் பெற்ற ஜெர்மானியன்

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மனிதன் பெரும்பாவம் ஒன்றில்h வீழ்ந்தான். அதனை அறிக்கையிட வெட்கப்பட்டு பாவசங்கீர்த்தனம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தான். ஆனால் தான் புரிந்த பாவத்தின் குற்ற உணர்ச்சியை தாங்க மாட்டாமல், ஆற்றில் விழுந்து தற்கொலை செய்யப் போனான். அந்த வேளையில், தற்கொலை செய்ய மனமின்றி மிகவும் தயங்கி, அழுதுகொண்டே, எல்லாம் வல்ல இறைவனிடம் தனது பாவங்களை, பாவ அறிக்கையின்றி மன்னிக்கும் படியாக கெஞ்சி மற்றாடினான்.

ஒருநாள் இரவில் அவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் அவனது கரங்களை அசைத்தது போன்று உணர்ந்தான். அப்போது பாவங்களை அறிக்கையிடச் செல் என்ற குரலையும் கேட்டான். ஆலயத்திற்கு சென்றான் அனால் பாவத்தை அறிக்கையிடாமல் திரும்பி விட்டான். மற்றொரு நாள் இரவில், மீண்டும் அந்த குரலை கேட்டான். ஆலயத்திற்கு திரும்ப சென்றான். ஆனால் அங்கு சென்றபின் அந்த பாவத்தை அறிக்கையிடுவதைக் காட்டிலும் தான் இறப்பதே மேல் என்று நினைந்து வீட்டிற்கு திரும்பி போக எண்ணினான்.

ஆனால் அதற்கு முன்னர், ஆலயத்தில் இருந்த மிகவும் பரிசுத்த கன்னி மரியாளின் திருவுருவப் படத்தின் சென்று தனக்காக பரிந்து பேசும்படி மன்றாடச் சென்றான். அன்னையின் முன்னால் முழங்காலில் இருந்து செபித்த கொஞ்ச நேரத்திலேயே, தனக்குள் மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்தான்.    

அந்த கணமே அவன் எழும்பி, பாவ அறிக்கையிட குருவானவரை  அழைத்தான். மனம் வருந்தி, அழுதுகொண்டே அன்னை மரியாளிடமிருந்து பெற்ற அருளின் வழியாக தனது அனைத்து பாவங்களையும் அறிக்கையிட்டான். அதன் பின்னர் இவ்வுலகில் உள்ள அனைத்து செல்வங்களை தனக்கு கிட்டினாலும் கிடைக்காத பெரும் மனநிம்மதியை, இந்த பாவ மன்னிப்பின் மூலம் தான் பெற்றதாக அறிக்கையிட்டான்.  

*****சிந்தனை******

நல்ல பாவசங்கீர்த்தனம் என்பது, நமது அனைத்து பாவங்களையும் அறிக்கையிடுவது. எளிதான சில பாவங்களை மட்டும் அறிக்கையிட்டபின்னர்  மற்ற பெரிய பாவங்களை மறந்து போன பாவங்களில் சேர்ப்பது அன்று. ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யும் போது நமது பாவங்களால் நமதாண்டவர் பட்ட வேதனைகளை எண்ணி  நாம் நெஞ்சுருகி நமது கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வரவேண்டும். குருவானவரின் வழியாக நமதாண்டாவர் நாம் எவ்வளவு பெரிய பாவங்களை புரிந்திருந்தாலும் நம்மை தனது இறை இரக்கத்தின் வழியாக மூலம் மன்னிக்கிறார். 

பாத்திமாவில் அன்னை காட்சியளித்த நூறாவது ஆண்டில் இருக்கும் நாம்  கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை நழுவவிடாமல், அன்னையின் இந்த மாதத்தில் விண்ணகத்தின் அரசியின் வழியாக நமது பாவங்களை அறிக்கையிட்டு, திவ்ய நற்கருணையை அடிக்கடி உட்கொண்டு நமதாண்டவரின் பாடுகளில் பங்கேற்று நம்மை தூய்மைப்படுத்தி அன்னையின் வழியாக அவரைச் சென்றடைவோமாக....

இயேசுவுக்கே புகழ்!!!! மாமரித்தாயே வாழ்க!!!!

நன்றி பிரதர் : மரிய ஜெரால்டு ராஜன்